7-11 கடையை அடித்து நொறுக்கிய ஆடவர்

7-11 கடையை அடித்து நொறுக்கிய ஆடவர்

1 mins read
2e3a8eea-ffde-465a-ab00-a38baaec106c
படம்: சமூக ஊடகம் -

தைவானில் 7-11 கடை ஒன்றை ஆடவர் ஒருவர் அடித்து நொறுக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ஆடவர் காவல்துறை அதிகாரிகளை அடிக்கச் செல்வதும் அதன் பின்னர் அவரை அதிகாரிகள் கைது செய்வதும் காணொளியில் இடம்பெற்றிருந்தது.

சம்பவம் மே 20ஆம் தேதி காலை தோயுவான் பகுதியில் உள்ள 7-11 கடையில் நடந்ததாக தைவானிய செய்தி நிறுவனங்கள் கூறின.

கட்டுடல் கொண்ட சூ என்னும் 28 வயது ஆடவர் கடைக்குள் சட்டையில்லாமல் நுழைந்துள்ளார், சந்தேகம் வருவது போல் நடந்து கொண்ட ஆடவர் கடையில் உள்ள பொருள்களை சேதப்படுத்தியுள்ளார்.

அதைக் கண்ட கடை ஊழியர் காவல்துறைக்குத் தகவல்கொடுத்தார்.

அதிகாரிகளைக் கண்ட ஆடவர் கோபமடைந்து கடையை அடித்து நொறுக்கினார். காவல்துறை அதிகாரி ஒருவரையும் அவர் தாக்கச் சென்றார்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதான நபரை அதிகாரிகளில் ஒருவர் கடுமையாகத் தாக்கும் காட்சியும் காணொளியில் இடம்பெற்றிருந்தது.

அதைத்தொடர்ந்து அந்த காவல்துறை அதிகாரி மீதும் விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
கைதுதைவான்