காபூல்: ஆப்கானிஸ்தான் மக்கள் இரண்டாவது நாளாக இணையம் மற்றும் கைப்பேசி சேவைகள் இல்லாமல் திணறிவருகின்றனர்.
ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் தொலைத்தொடர்பு கட்டமைப்பைத் துண்டித்துள்ளதால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள சில மாநிலங்களில் வேகமாகச் செயல்படும் இணையச் சேவைகளைத் தடை செய்யத் தொடங்கினர்.
ஆபாச செயல்களை ஒழிக்க இதைச் செய்வதாக அவர்கள் கூறுகின்றனர்.
திங்கட்கிழமை இரவு இணையச் சேவைகளின் வேகம் ஒரு விழுக்காட்டிற்குக் குறைவாக இருந்ததாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இணைய வசதி இல்லாமல் ஆப்கானிஸ்தான் மக்கள் சிரமப்படுவதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 9,000 தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எப்போது தொலைத்தொடர்பு சேவை கிடைக்கும் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
2021ஆம் ஆண்டு முதல் தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தி வருகிறது. தலிபான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அந்நாட்டில் கடுமையான இஸ்லாமியச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.