பேரிழப்பில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள்: தமிழ்நாடும் தப்பவில்லை

பேரிழப்பில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள்: தமிழ்நாடும் தப்பவில்லை

2 mins read
0a7628d6-6e7a-4a12-8067-7ab699b86125
இந்தியாவில் மாநில அளவில் பொதுத் துறை நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்குவதாக 16வது நிதிக்குழு அறிக்கை கூறுகிறது - படம்: தி ஹிந்து

பொதுத் துறை நிறுவனங்களில் பெரும்பாலானவை பேரிழப்பைச் சந்தித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் மாநில அளவில் பொதுத் துறை நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்குவதாக உறுதிப்படுத்தியுள்ளது 16வது நிதிக்குழு.

பொதுத் துறை நிறுவனங்களில் பின்னடவை சந்தித்து வரும் இந்திய மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகியவை முதல் மூன்று இடங்களில் இருப்பதாக 16வது நிதிக்குழு அறிக்கை கூறியது.

மாநிலங்களுக்கு இடையிலான நிதிப் பகிர்வு அறிக்கையை சமர்ப்பித்த நிதிக்குழு, நாட்டில் பொதுத்துறை நிறுவனங்களில் அதிக இழப்பைச் சந்தித்து வரும் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று, என்றும் விவரித்தது. அத்துடன் இது தொடர்பில் மாநிலங்களின் நிதி நிலை குறித்த தகவல்களையும் நிதிக்குழு வெளியிட்டுள்ளது. 

அதன்படி முதலிடத்தில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 2022-23ஆம் ஆண்டில் 32,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் மாநில பொதுத் துறை நிறுவனங்கள் 18,814 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன.

தமிழ்நாட்டின்  பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பு 16,048 கோடி ரூபாய் என்ற அளவாக உள்ளது. 

தமிழ்நாடு மாநிலத்தில் உற்பத்தி, விநியோகம் அமைப்புக் குழுமமான  (Tangedco) ஆக அதிகமான 9,192 கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருந்தது. என்றபோதும், அது தொடர்பாக மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், பின்னடைவில் இருந்து நிறுவனங்கள் மீளத் தொடங்கியதாகவும் நிதிக்குழு அறிக்கை குறிப்பிட்டது.

இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவது மாநில அரசுகளின் வரவுச் செலவுத் திட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நிதிக்குழு அறிக்கை விளக்கியது.

குறிப்பாக,  தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ 100 பொதுத்துறை நிறுவனங்களில் 35 நிறுவனங்கள் லாபம் ஈட்டாமல் இயங்கி வருவதாகவும் அறிக்கை மேலும் தெரிவித்தது. 

குறிப்புச் சொற்கள்