டான்ஸானியா: ஆடவர் ஒருவர் உடலை அசாதாரணமான முறையில் வளைப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம்வருகிறது.
அந்தக் காணொளி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டான்ஸானியாவைச் சேர்ந்த ஹசான் மைக்கல் என்ற அந்த ஆடவர் தமது உடலைத் தனித்துவமான முறையில் வளைக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்.
அவரது சமூக ஊடகப் பக்கத்தில் பலரை ஈர்க்க அவர் அடிக்கடி அத்தகைய வியக்கத்தக்க பதிவுகளைப் பதிவேற்றம் செய்வதுண்டு.
அண்மைய காணொளியில், ஹசான் தரையில் கைகளை வைத்தபடி முன்னோக்கி வளைவதைக் காணமுடிகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் தமது கைகளை உள்ளிழுத்து பாதங்களை மட்டுமே கொண்டு தவழ்வதைக் காண முடிகிறது.
அவரின் அசைவுகள் வனவிலங்கின் அசைவுகளைப் போல் உள்ளதால், அவரது விசித்திரமான உடலமைப்பைக் கண்டு பலரும் வியப்பில் உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், ஹசான் சிலந்தியைப் போல் நகரும் காட்சியும் காணொளியில் இடம்பெற்றுள்ளது. அவரது கைகளுக்கும் கால்களுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு நம்பமுடியாத அளவில் உள்ளதாகப் பலரும் கூறுகின்றனர்.
‘ஹசான் கொரில்லா’ என்று அழைக்கப்படும் அவர், இன்ஸ்டகிராமில் அந்தக் காணொளியைப் பகிர்ந்துகொண்டார்.