ஏர்ஏஷியா X விமான இருக்கைகள் சிலவற்றில் மஞ்சள் நிறபட்டை ஒட்டப்பட்ட படங்கள் இணையத்தில் கடந்த சில நாள்களாக அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தைப்பேவில் இருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் சில இருக்கையின் கை வைக்கும் இடங்களில் மஞ்சள் நிறபட்டை ஒட்டப்பட்டிருந்தன.
அதை படம் எடுத்து பதிவு செய்த எட்வர்ட் யாங் என்னும் நபர் இது தமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
அந்தப் பதிவு 3,000-க்கும் அதிகமான முறை பகிரப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஏர்ஏஷியா X அதற்கான பதிலை தெரிவித்துள்ளது.
மஞ்சள் நிறபட்டை பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லை என்றும் அது இருக்கையில் உள்ள சிறு சிறு பழுதுகளுக்காக அடையாளம் காண ஒட்டப்பட்டதாக ஏர்ஏஷியா X நிர்வாகி கூறினார்.
அந்த பழுதுகள் விரைவில் சரிபார்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

