வரிவிதிப்பு: $1.2 பில்லியன் கூடுதல் செலவுகள் குறித்து ஆப்பிள் எச்சரிக்கை

1 mins read
3a8fa5c3-ff6e-4b9e-bc80-073d8f21ca35
ஹுவாவெய், ஸியாவ்மி, ஓப்போ போன்ற உள்ளூர் கைப்பேசி நிறுவனங்களுடன் ஆப்பிளால் போட்டி தர இயலவில்லை.  - படம்: ராய்ட்டர்ஸ்

சான் ஃபிரான்சிஸ்கோ: ஐஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காலாண்டு வருவாய் அறிக்கை, அதன் ஆகப்பெரிய சவால்கள் குறித்து முதலீட்டாளர்களின் கவலைகளைத் தணிக்கத் தவறியது.

இரண்டாம் காலாண்டுக்கான முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டதைத் தொடர்ந்து, பங்குகள் வியாழக்கிழமை (மே 1) 4.2 விழுக்காடு வரை வீழ்ச்சி கண்டன. சீனாவில் எதிர்பார்க்கப்பட்டதைவிட விற்பனை மந்தமடைந்தது.

அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்தக் காலாண்டில் செலவுகள் அதிகரிக்கும் என ஆப்பிள் எச்சரித்துள்ளது.

வரிவிதிப்பால் தற்போதைய காலகட்டத்தில் US$900 மில்லியன் (S$1.2 பி.) செலவுகள் அதிகரிக்கும் என ஆப்பிள் எதிர்பார்ப்பதாக அதன் தலைமை நிர்வாகி டிம் குக் தெரிவித்தார்.

மார்ச் 29ஆம் தேதி முடிவுற்ற இரண்டாம் காலாண்டில் சீனாவில் விற்பனை 2.3 விழுக்காடு குறைந்து US$16 பில்லியனாகப் பதிவானது. அங்கு விற்பனை US$16.83 பில்லியனாக இருக்கும் என நிபுணர்கள் கணித்திருந்தனர்.

ஹுவாவெய், ஸியாவ்மி, ஓப்போ போன்ற உள்ளூர் கைப்பேசி நிறுவனங்களுடன் ஆப்பிளால் போட்டிப்போட இயலவில்லை. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சாதனங்களை சில வேலையிடங்களில் பயன்படுத்த சீன அரசாங்கம் தடை விதித்திருப்பதே இதற்கான காரணங்களில் ஒன்று.

குறிப்புச் சொற்கள்