விமான நிலையத்தில் பயணியை ஏமாற்றிய டாக்சி ஓட்டுநர் கைது

விமான நிலையத்தில் பயணியை ஏமாற்றிய டாக்சி ஓட்டுநர் கைது

1 mins read
ad091f31-2a27-4ec5-86bc-e554a70ea041
டாக்சி ஓட்டுநர் விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்திலிருந்து முதல் முனையத்திற்குச் செல்ல அந்தப் பயணியிடம் 80 ரிங்கிட் (26 வெள்ளி) வசூலித்துள்ளார்.  - படம்: சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துப் பிரிவு

கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணியை ஏமாற்றிய டாக்சி ஓட்டுநர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக டாக்சி சேவை வழங்கிய அந்த ஆடவர் விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்திலிருந்து முதல் முனையத்திற்குச் செல்ல அந்தப் பயணியிடம் 80 ரிங்கிட் (26 வெள்ளி) வசூலித்துள்ளார். அதன் பிறகு அவர் அதிகாரிகளிடம் சிக்கினார்.

பயணத்திற்காகப் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த ஆடவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துப் பிரிவு ஃபேஸ்புக் பக்கத்தில் தகவலைப் பகிர்ந்தது.

கூகல் வரைபடத்தின் தகவல்படி, கோலாலம்பூர் விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்திலிருந்து முதல் முனையத்திற்குச் செல்ல 7.8 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். கிட்டத்தட்ட 10 நிமிடங்களில் பயணம் நிறைவடையும்.

மலேசியாவில் சட்டவிரோதமாக டாக்சி சேவை வழங்கினால், டாக்சி ஓட்டுநருக்கு 50,000 ரிங்கிட் (16,200 வெள்ளி) வரையிலான அபராதம், ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

விமான நிலையத்தில் டாக்சி சேவையை நாடுபவர்கள் சட்டப்படி இயங்கும் டாக்சி நிறுவனங்களைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்