தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசை ஆதரிக்கும் டெய்லர் சுவிஃப்ட்

1 mins read
16e553e0-1e40-424c-8e00-16ccad0a5193
பாடகி டெய்லர் சுவிஃப்ட் (இடம்), அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ். - படங்கள்: ஏஎஃப்பி, நியூயார்க் டைம்ஸ்

வாஷிங்டன்: புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கும் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்சுக்கும் வாக்களிக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

இதன் மூலம், ஜனநாயகக் கட்சியினரின் நீண்டநாள் எதிர்பார்ப்பை அவர் நிறைவுசெய்துள்ளார்.

துணை அதிபர் ஹாரிசும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் பங்கேற்ற நேரடி விவாதம் முடிவடைந்த சிறிது நேரத்தில் பாடகி சுவிஃப்டின் ஆதரவு குறித்த தகவல் வெளியானது.

“2024 அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ், டிம் வால்ஸ் இருவருக்கும் வாக்களிக்கவிருக்கிறேன்,” என்று செப்டம்பர் 11ஆம் தேதி, சுவிஃப்ட் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

அந்தப் பதிவு வெளியான ஒரு மணி நேரத்திற்குள் மூன்று மில்லியன் விருப்பக் குறியீடுகளைப் பெற்றுள்ளது.

உங்களில் பலரைப்போலவே நானும் தொலைக்காட்சி விவாதத்தைப் பார்த்தேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருவாட்டி ஹாரிஸ் உரிமைகளுக்காகவும் நோக்கங்களுக்காவும் போராடுவதாகக் கூறிய அவர், அவற்றை வெற்றிகொள்ள ஒரு போராளி தேவை எனத் தாம் நம்புவதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்