வாஷிங்டன்: உலகப் பிரபலம்வாய்ந்த பாடகி டெய்லர் சுவிஃப்ட், அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிசுக்குத் தெரிவித்திருக்கும் ஆதரவு பெரிய அளவிலான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இன்ஸ்டகிராமில் திருவாட்டி ஹாரிசுக்கு சுவிஃப்ட் ஆதரவு தெரிவித்த பதிவுக்கு, 10.4 மில்லியன் ‘லைக்ஸ்’ கிடைத்தன.
அதோடு, 24 மணி நேரத்தில் ‘Vote.gov’ இணையத்தளத்திற்குக் கிட்டத்தட்ட 406,000 பேர் சென்றதாக அமெரிக்க அரசாங்கப் பேச்சாளர் கூறினார்.