ஜக்கார்தோ: இந்தோனீசியா அரசாங்க நிறுவனங்களில் அரசுக்கு இருக்கும் முதலீடுகளை நிர்வகிக்க சிங்கப்பூரின் தெமாசெக் முதலீட்டு நிறுவனத்தைப் போன்ற முதலீட்டு நிறுவனம் ஒன்றை நிறுவ உள்ளது.
இதன் தொடர்பில், அந்நாட்டு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4ஆம் தேதி) இதற்கான வரைவு சட்டத்தின்மீது வாக்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயா அனகத்தா நுசந்தாரா அல்லது சுருக்கமாக தனன்தாரா எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த முதலீட்டு நிறுவனம் பற்றி இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் பதவியேற்ற இரண்டு நாட்களிலேயே அறிவித்தார். சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான தெமாசெக் பாணியில் இந்தோனீசிய அராசங்கம் செய்துள்ள முதலீடுகளை எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றின் லாப ஈவு எப்படி உள்ளது போன்றவற்றை கண்காணிக்கும் நோக்கில் தனன்தாரா செயல்படும் என்று விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.
இந்த சட்ட வரைவு நாடாளுமன்ற ஒப்புதலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய முதலீட்டு நிறுவனம் தொடக்க நிதியாக 1,000 டிரில்லியன் ருப்பியாவை (S$83.3 மில்லியன்) பெறும் என்று கூறப்பட்டுள்ளது.இதற்கான நிதி எங்கிருந்து பெறப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

