தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் செவ்வாய்க்கிழமை (மே 21) வெப்பநிலை 30 டிகிரி செல்சியசைக் கடந்தது.
2025ஆம் ஆண்டில் வெப்பநிலை முதல்முறையாக 30 டிகிரி செல்சியசைக் கடந்திருப்பது இதுவே முதல்முறை.
இத்தகவலை ஜப்பானிய வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
ஜப்பானின் வேறு சில பகுதிகளிலும் இந்நிலை ஏற்பட்டது.
ஒட்சுக்கியில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியசாகப் பதிவானது.