தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சைபீரியாவை வாட்டிவதைக்கும் பனிப்பொழிவு

1 mins read
78f778da-f40f-478c-bc53-1e039b182a19
மாஸ்கோவில் டிசம்பர் 3ஆம் தேதி பொழிந்த கடும் பனிப்பொழிவின்போது அப்பகுதியில் படிந்திருக்கும் பனியை ஊழியர் ஒருவர் சுத்தம் செய்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: சைபீரியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை சரிந்தது.

இவ்வாண்டுக் குளிர்கால வானிலை அந்நாட்டு மக்களின் இயல்புவாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் வீசும் பனிப்புயல் அப்பகுதி விமானப் போக்குவரத்துக்கு இடையூராக இருக்கிறது. இதனால் விமானங்கள் மிகவும் தாமதமாக புறப்படுகின்றன.

அங்கு வீசும் பனிப்புயலால் அப்பகுதி பனிப்போர்வை போர்த்தியதுபோல் உள்ளது.

சைபீரியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சாகா குடியரசில், உலகின் மிகக் குளிரான நகரங்களில் ஒன்றான யாகுட்ஸ்கில், வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியசுக்குக் குறைந்துள்ளதாக அந்நகர வானிலை நிலையங்கள் தெரிவிக்கின்றன.

சாகா குடியரசில் இருக்கும் அனைத்துப் பகுதிகளும் நிரந்தர உறைபனி மண்டலத்தில் அமைந்துள்ளன.

மாஸ்கோவிலிருந்து கிழக்கே கிட்டத்தட்ட 5,000 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அதன் தலைநகரான யாகுட்ஸ்கில், வெப்பநிலை மைனஸ் 44 டிகிரி முதல் மைனஸ் 48 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.

பருவநிலை மாற்றத்தால் அண்மைய ஆண்டுகளில் அப்பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியசுக்குக் குறைவாக உள்ளது.

இந்த வாரயிறுதியில் மாஸ்கோவில் வெப்பநிலை மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ர‌ஷ்யா