மீன் பிடி விளையாட்டில் ஏமாற்றிய இருவருக்குச் சிறை

மீன் பிடி விளையாட்டில் ஏமாற்றிய இருவருக்குச் சிறை

1 mins read
46014880-8c69-46e7-a7ab-9fbd353b49cd
படம்: பிக்சாபே -

அமெரிக்காவில் மீன் பிடி விளையாட்டில் ஏமாற்றிய இருவருக்கு 10 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேகப் ரன்யான், சேஸ் கமின்ஸ்கை என்னும் அந்த நபர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒஹாயோவில் நடந்த மீன் பிடி விளையாட்டில் கலந்துகொண்டனர்.

ஏரியில் அதிக எடைக்கொண்ட மீன்களைப் பிடிப்பவர்களுக்க்கு கிட்டத்தட்ட 40,000 வெள்ளி பரிசாக வழங்கப்படும்.

ஆடவர்கள் இருவரும் தாங்கள் பிடித்த மீன்களின் எடைகளைக் கூட்ட மீனின் வாய்க்குள் ஈயக்குண்டுகளை கொடுத்துள்ளார்கள்.

அந்த நடவடிக்கையின் காணொளியும் சமூக ஊடகங்களில் பரவியது.

அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆடவர்களின் எமாற்று வேலை நிரூபிக்கப்பட்டது.

அவர்களுக்கு கிட்டத்தட்ட 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

ஆடவர்களின் மீன்பிடி உரிமம் 3 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காமீன்