வாஷிங்டன்: ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஆறு தலைவர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள், இதர குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் தகவலை செப்டம்பர் மாதம் 3ஆம் தேதியன்று அமெரிக்கா வெளியிட்டது.
இக்குற்றச்சாட்டுகள் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியன்று பதிவாகின.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலுடன் இக்குற்றச்சாட்டுகள் தொடர்புடையவை.
குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களில் ஹமாஸ் அமைப்பின் தற்போதைய தலைவரான யஹ்யா சின்வாரும் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் அடங்குவர்.
திரு இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார்.
பயங்கரவாத தாக்குதல்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, ஆதரவு வழங்கி மரணம் விளைவித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அந்த ஆறு தலைவர்களையும் பிடித்துத் தடுப்புக் காவலில் வைக்கும் நோக்குடன் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை அறிக்கை வெளியிட்டது.
ஹமாஸ் அமைப்பைப் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் 1997ஆம் ஆண்டில் அமெரிக்கா சேர்த்தது.
தொடர்புடைய செய்திகள்
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் பலர் மாண்டனர்.
இதன் காரணமாக காஸாவில் தற்போது போர் தலைவிரித்தாடுகிறது.
தாக்குதல்கள் காரணமாக குறைந்தது 43 அமெரிக்கர்கள் மாண்டுவிட்டதாகவும் குறைந்தது 10 அமெரிக்கர்கள் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அல்லது மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.