அக்டோபர் 3 முதல் தாய் ஏர்வேஸ் விமானங்கள் முழுமையாக இயங்கும்

அக்டோபர் 3 முதல் தாய் ஏர்வேஸ் விமானங்கள் முழுமையாக இயங்கும்

படம்: ராய்ட்டர்ஸ்

02 Oct 2026 - 7:20 pm

1 mins read

பேங்காக்: ஊழியர் பற்றாக்குறை காரணமாக இரு நாள்களாக தற்காலிகமாகக் குறைக்கப்பட்டிருந்த தாய் ஏர்வேஸ் விமானச் சேவைகள் சனிக்கிழமை (அக்டோபர் 3) மீண்டும் முழுமையாக இயங்கும் என்று அந்த விமானச் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

சேவைகளைச் சீரமைக்க, அக்டோபர் 1ஆம் தேதி 15 விமானச் சேவைகளையும் அக்டோபர் 2ஆம் தேதி மேலும் 9 விமானச் சேவைகளையும் அந்நிறுவனம் குறைத்திருந்தது.

அனைத்துச் சேவைகளையும் மீண்டும் செயல்படுத்தும் வகையில், அதன் அனைத்துத் துறைகளிலிருந்தும் கூடுதல் பணியாளர்களைத் திரட்டி, விமான மேலாண்மைப் பணிகளைத் தாய் ஏர்வேஸ் தீவிரப்படுத்தியுள்ளது.

பயண அட்டவணை மீண்டும் வழமைக்குத் திரும்பும் வேளையில், பயணிகளுக்கு கூடுதல் சேவைகளை வழங்கும் நோக்கில், விபாவடி ரங்சித் சாலையில் உள்ள தலைமையகத்தில் அமைந்துள்ள பயணச்சீட்டு விற்பனை அலுவலகம் அக்டோபர் 3, 4 ஆகிய வார இறுதி நாள்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பயணிகளுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், இச்சம்பவத்திலிருந்து கற்ற அனுபவங்களைக் கொண்டு தனது செயல்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்தவுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்
உலகம்தாய்லாந்துபேங்காக்விமானச் சேவைபயணிகள்