விடுதலைக்குப் பிறகு முதல்முறையாக பொது இடத்தில் தக்சின் ஷினவாத்

விடுதலைக்குப் பிறகு முதல்முறையாக பொது இடத்தில் தக்சின் ஷினவாத்

1 mins read
67c3f733-2f5e-4cd8-997d-e7815fe881ea
திரு தக்சின் அவரது ஆக இளைய மகளுடன் மார்ச் 14ஆம் தேதி பேங்காக் நகர புனிதத் தலத்தைச் சென்றடைந்தார். - படம்: இபிஏ
multi-img1 of 2

பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் மார்ச் 14அம் தேதி தமது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர் முதல் முறையாகப் பொது இடத்தில் காணப்பட்டுள்ளார்.

திரு தக்சின் ஊழலுக்காகவும், ஆட்சியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டார்.

திரு தக்சின் பேங்காக் நகரப் புனிதத் தலத்தில் வழிபட்ட பிறகு, தனியார் விமானம் மூலம் மூன்று நாள் பயணம் மேற்கொண்டு சியாங் மாய் சென்றுள்ளார்.

தமது சொந்த ஊரான சியாங் மாயில் உள்ளூர் நேரப்படி காலை 9.40 மணியளவில் தரையிறங்கிய திரு தக்சினை, அவரது இளைய சகோதரியும் அவரது கணவரும் வரவேற்றனர்.

பின்னர் அவர்கள் பூங்கா ஒன்றுக்குச் சென்று ஆதரவாளர்களைச் சந்தித்தனர்.

வடகிழக்கில் உள்ள சுரின் மாநிலத்திலிருந்து வந்த திரு சம்நியாங் கொங்பொல்பார்ன், “அவருக்காக நான் 17 ஆண்டுகள் காத்துக்கொண்டிருந்தேன்,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்