தாய்லாந்தில் ஆடவர் ஒருவர் தனது காதலியிடம் முக்கியமான கேள்வி ஒன்றை கேட்பதற்காக 1,200 கிலோமீட்டர் நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அவர் தன் காதலியிடம் கேட்கவுள்ளார்.
சுதேப் என்பவர் வசிக்கும் மாநிலத்திற்கும் அவரது காதலி வசிக்கும் மாநிலத்திற்கும் கிட்டத்தட்ட 1,200 கிலோமீட்டர் தூரம். அன்பர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி அன்று காதலியின் வீட்டை அடைவது அவரது இலக்கு. இதற்காக அவர் தனது வீட்டிலிருந்து ஜனவரி 14ஆம் தேதி அன்றே புறப்பட்டுவிட்டார்.
மனைவிகளுக்கு துரோகம் செய்பவர்களும் தங்கள் குடும்பங்களை புறக்கணிப்பவர்களும் என் பயணத்திலிருந்து கற்றுகொள்ளவேண்டும் என்கிறார் சுதேப்.
சனிக்கிழமை நிலவரப்படி அவர் 1,100 கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளார். செவ்வாய்க்கிழமைக்குள் அவர் தனது காதலி இருக்கும் இடத்தை அடைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுதேப்பும் அவரது காதலியும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் டிக்டாக் தளம் வழியாக சந்தித்தனர். இருவருக்கும் 56 வயதாகிறது.
நடைப்பயணத்தை தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 17 கிலோகிராம் எடையை குறைத்துள்ளதாக சுதேப் குறிப்பிட்டார்.

