'சைனைட்' வைத்து 12 நண்பர்களை கொன்றதாக பெண் கைது

1 mins read
81e819a8-bfe8-4948-899e-0211f296fdc4
படம்: இபிஏ -

தாய்லாந்தில் சைனைட் வி‌‌சத்தைக் கொண்டு 12 நண்பர்களைக் கொன்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சராராட் ரங்கிஸ்வுத்தாபார்ன் என்ற அந்த பெண் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) கைது செய்யப்பட்டார்.

சராராட்டின் தோழி ஒருவர் அண்மையில் மாண்டார். அந்த மரணம் குறித்து விசாரணை செய்யும்போது சராராட் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்மாத தொடக்கத்தில் சராராட்டும் மாண்ட அந்தப்பெண்ணும் சுற்றுலா சென்றிருந்தனர். சுற்றுப்பயணத்தின் போதே திடீரென அப்பெண் மரணமடைந்தார்.

பெண்னின் சடலத்தில் 'சைனைட்' இருந்தது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் சராராட் தமது முன்னாள் காதலன் உட்பட மேலும் 11 பேரை 'சைனைட்' வைத்து கொன்றதாக நம்பப்படுகிறது.

பணத்திற்காக அந்த கொலைகளை அவர் செய்ததாக அதிகாரிகள் கூறினர்.

கொலைகள் 2020ஆம் ஆண்டில் இருந்து தொடங்கியுள்ளது.

தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சராராட் மறுத்துள்ளார்.

சராராட் பிணையில் வெளியே செல்ல கேட்ட அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்