தாய்லாந்தில் ஏப்ரல் மாத இறுதி வரை எரிக்கக் கட்டுப்பாடு

தாய்லாந்தில் ஏப்ரல் மாத இறுதி வரை எரிக்கக் கட்டுப்பாடு

1 mins read
ffcc8680-d3a7-4ccc-9b16-a1f991f27597
படம்: ராய்ட்டர்ஸ் -

தாய்லாந்தில் புகைமூட்டம், காட்டுத் தீ முதலியவற்றைத் தடுக்க ஏப்ரல் மாதம் இறுதி வரை அங்கு எரிக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் எல்லாப் பகுதிக்கும் அது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தவும் காற்று மாசு அடையாமல் இருக்கவும் இந்த புதிய திட்டம் உதவும் என்று தாய்லாந்து தெரிவித்தது.

கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

காட்டுத் தீயினால் விவசாய நிலங்கள், வீடுகள் போன்றவை பாதிக்கப்படுவதாகவும் காசு மாசு அடைவதால் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.