துக்கமான நேரத்தில் பொதுமக்கள் காட்டிய ஆதரவுக்கு நன்றி: டாக்டர் மகாதீர்

துக்கமான நேரத்தில் பொதுமக்கள் காட்டிய ஆதரவுக்கு நன்றி: டாக்டர் மகாதீர்

பலவீனமாக இருப்பதால் அலுவலகத்துக்கு வர இயலவில்லை என்று வருத்தம்
படம்: ஏஎஃப்பி

19 Oct 2026 - 9:25 pm

1 mins read

கோலாலம்பூர்: தம் மனைவி சித்தி ஹஸ்மா முகமது அலியின் மறைவையடுத்து, அவருக்காகப் பிரார்த்தனைகள் செய்ததுடன் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறிய பொதுமக்களுக்கு மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, 101, நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி டாக்டர் மகாதீரின் மனைவி சித்தி ஹஸ்மா தமது 100வது வயதில் இயற்கை எய்தினார். அதன் பிறகு கடந்த சில நாள்களாகத் தாம் அலுவலகம் செல்ல முயன்றும் போதிய உடல் வலிமை இல்லாததால் தம்மால் இயலவில்லை என்று திங்கட்கிழமை (அக்டோபர் 19) வெளியிட்ட அறிக்கையில் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

திருவாட்டி ஹஸ்மாவின் இறுதிச் சடங்கு தொடர்பான ஏற்பாடுகளைச் செவ்வனே செய்ய உதவிய அனைவருக்கும் தமது குடும்பத்தின் சார்பில் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

1956ஆம் ஆண்டு டாக்டர் மகாதீர், திருவாட்டி ஹஸ்மாவை மணந்தார். தமது வாழ்வின் எஞ்சியிருக்கும் காலகட்டம் சிறிது என்றும் நீண்ட நெடிய காலம்வரை மனைவி ஹஸ்மாவைத் தம்முடன் வாழவைத்த இறைவனுக்கு என்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தத் துயரநேரத்தில் திருவாட்டி ஹஸ்மாவை முன்னிட்டு நடத்தப்பட்ட தொடர் பிரார்த்தனைகள் நினைவூட்டுகின்றன என்றும் அவர் உருக்கமாகக் கூறினார்.

அத்துடன், இரங்கல் செய்திகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் போனதற்காக அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். புத்ராஜெயாவில் உள்ள தேசிய இடுகாட்டில் திருவாட்டி சித்தி ஹஸ்மாவின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபிரதமர்மகாதீர் முகம்மது