கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கோலாலம்பூர் பகுதியில் முகமூடி அணிந்த ஆடவர்கள் பட்டப்பகலில் சாலை ‘கேபிள்’ கம்பிகளைத் திருடியது காணொளியில் பதிவானது.
அச்சம்பவம் பதிவான 38 நொடிக் காணொளி திரெட்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பகிரப்பட்டது. அதில் இருண்ட ஆடைகளையும் முகமூடியையும் அணிந்திருந்த ஆடவர்கள் மேம்பாலத்துக்கு அருகே உள்ள சாலையில் சம்பிகளைத் திருடுவது தெரிந்தது.
பிறகு அவர்கள் அந்தக் கம்பிகளை இரண்டு கறுப்பு நிற வாகனங்களில் ஏற்றித் தப்பியோடினர். அந்த வாகனங்கள் ஒரு பிக்கப் வேனும் காரும் ஆகும்.
அந்த ஆடவர்கள் வாகனங்களை ஓட்டிச் சென்றபோது பலர் அவற்றின்மீது சாலைக் குறிப்பு கோன்களை எறிந்து அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களைத் தடுக்க முடியாமல் போனது.
இச்சம்பவம் டிஆர்இசி கோலாலம்பூர் பகுதியில் நிகழ்ந்ததாக காணொளியைப் பகிர்ந்த திரெட்ஸ் பயனர் தெரிவித்திருந்தார்.
