லண்டன்: பிரிட்டனின் ‘வின்சோர்’ மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து முகக்கவசம் அணிந்திருந்த ஆடவர் இருவர் இரண்டு வாகனங்களைத் திருடியுள்ளனர்.
‘தி சன்’ நாளேடு அந்தத் தகவலை வெளியிட்டது.
சம்பவம் நடந்த நேரத்தில், மன்னர் சார்ல்சும் அவரது துணைவியார் கமிலாவும் அங்கு இல்லை. இருப்பினும், இளவரசர் வில்லியமும் அவரது குடும்பத்தாரும் மாளிகையின் ஒரு பகுதியான ‘எடிலெய்ட் காட்டேஜ்’ல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆடவர்கள் திருடப்பட்ட வண்டியைக் கொண்டு பாதுகாப்பு நுழைவாயிலை உடைத்து மாளிகைக்குள் நுழைந்தனர்.
இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் விசாரணை தொடர்கிறது என்றும் ‘தேம்ஸ் வேலி’ காவல்துறை கூறியது.