திருமண விருந்துகளில் திருட்டு; தம்பதியர் கைது

1 mins read
9f6cc524-0c1c-4a22-945e-dfe00dced018
பிப்ரவரி 1ஆம் தேதி கிளந்தான் மாநிலத்தில் உள்ள பாசிர் மாஸ் நகரில் நடைபெற்ற திருமண விழாவில் 2,500 ரிங்கிட் (S$756) திருடிய குற்றத்துக்காக அவர்கள் இருவரும் பிப்ரவரி 16ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தனர். - படம்: இணையம்

கோலாலம்பூர்: மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் திருமண விருந்துகளில் திருடியதற்காகத் தம்பியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்குற்றம் தொடர்பாக இத்தம்பதியர் ஒரே வாரத்தில் இருமுறை கைது செய்யப்பட்டனர்.

கணவன்-மனைவி இருவரும் 60 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

பிப்ரவரி 1ஆம் தேதி கிளந்தான் மாநிலத்தில் உள்ள பாசிர் மாஸ் நகரில் நடைபெற்ற திருமண விழாவில் 2,500 ரிங்கிட் (S$756) திருடிய குற்றத்துக்காக அவர்கள் இருவரும் பிப்ரவரி 16ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி கிளந்தானில் உள்ள தும்பாட் நகரில் நடைபெற்ற திருமண விருந்தில் இவ்விருவரும் 3,000 ரிங்கிட் திருடியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இத்தம்பதியர் பிப்ரவரி 20ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

பெண் ஒருவர் விருந்தினரைப் போல திருமண விருந்தில் கலந்துகொண்டு தமது படுக்கையறைக்குள் நுழைந்து தமது மனைவியின் கைப்பையைத் திருடிச் சென்றதாக ஆடவர் ஒருவர் புகார் அளித்ததாக தும்பாட் காவல்துறைத் தலைவர் முகம்மது கைரி ஷஃபி கூறினார்.

அந்தக் கைப்பயையில் 3,000 ரிங்கிட் ரொக்கம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண் நான்கு நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.

அவரது கணவர் இரண்டு நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்