தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடையில் ஒரு கால் காலணியை மட்டும் திருடிய திருடர்கள்

1 mins read
7aafc18f-e634-41fc-870b-5d8a59d9df70
படம்: பிக்சாபே -

பெருவில் கடை ஒன்றில் 200க்கும் மேற்பட்ட காலணிகளைத் திருடர்கள் திருடியுள்ளனர்.

ஹூவான்காயோ என்ற பகுதியில் அந்த திருட்டு நடந்துள்ளது.

இருப்பினும் திருடர்கள் ஜோடியாகக் காலணிகளைத் திருடாமல் வலது கால் காலணிகளையும் மட்டும் திருடியுள்ளனர்.

திருடப்பட்ட காலணிகளின் மதிப்பு கிட்டத்தட்ட 15,000 வெள்ளி இருக்கும் என்று கடையின் உரிமையாளர் கூறினார்.

மூன்று திருடர்கள் கடைக்குள் நுழைவது அங்கிருந்த பாதுகாப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.

திருடர்கள் கடையை உடைத்து காலணி பெட்டிகளை எடுத்துச் செல்வது தெளிவாக பதிவாகியுள்ளன.

திருடர்கள் தடையங்களை விட்டுச் சென்றுள்ளதால் விரைவில் பிடிபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வலது கால் காலணியை மட்டும் வைத்து திருடர்கள் என்ன செய்வார்கள் என்று சமூக ஊடகங்களில் பயனீட்டாளர்கள் பலர் நகைச்சுவையாக கேள்விகேட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்