தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் ஸ்பானிய சுற்றுப்பயணிக்கு நேர்ந்த கொடுமை; மூவர் கைது

1 mins read
86f319dc-0f9e-43a4-b6ce-39d78f0cff9f
தம்பதியரின் மோட்டார்சைக்கிள் பயணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. - படம்: பிக்சாபே

ஜார்க்கண்ட்: ஸ்பானியத் தம்பதியர் ஒருவர் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் உலகம் முழுதும் மோட்டார்சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான திட்டத்தைத் தொடங்கினர்.

இதுவரை 63 நாடுகளுக்குச் சென்ற அவர்கள் இந்தியாவின் ஜார்க்கண்டின் டும்கா பகுதியில் கொடுமையான அசம்பாவிதத்தைச் சந்தித்தனர்.

“யாருக்கும் நடக்கக்கூடாத ஒன்று எங்களுக்கு நடந்தது. ஏழு ஆடவர்கள் என்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர்,” என்று அந்த மாது சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டார். தமது முகத்தில் ஏற்பட்ட மோசமான காயங்களைக் காட்டும் படங்களையும் அவர் பதிவேற்றம் செய்திருந்தார்.

பின்னர் அந்த மாதும் அவரது கணவரும் சமூக ஊடகத்திலிருந்து அந்தக் காணொளியை அகற்றினர். ஜார்க்கண்ட் காவல்துறையினர் விசாரணைக்கு இடைஞ்சல் கொடுக்கவேண்டாம் என்று தங்களிடம் கூறியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

“எனது முகம் இப்படி இருந்தாலும், எனக்கு மிகுந்த காயத்தை ஏற்படுத்தியது இதுவல்ல. நாங்கள் சாகப் போகிறோம் என்று நினைத்தோம். கடவுள் புண்ணியத்தில் நாம் உயிருடன் இருக்கிறோம்,” என்றார் அந்த மாது.

இதனிடையே, சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்