கலிஃபோர்னியா கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான நீல நிற உயிரினங்கள்

1 mins read
cf22c77c-6578-42a2-9dd1-920800280a41
படம்: Point Reyes National Seashores national park -

அமெரிக்காவின் தென் கலிஃபோர்னியா கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான நீல நிற ஜெல்லி மீன்களைப் போன்ற உயிரினங்கள் கரை ஒதுங்கி வருகின்றன.

அவை நச்சுத் தன்மை கொண்ட உயிரினங்கள் அல்ல, அதே நேரம் அவை ஜெல்லி வகை மீன்களும் அல்ல என்று ஆய்வாளர்கள் கூறினர்.

கடற்கரை செல்லும் பொதுமக்கள் அந்த உயிரினங்களைத் தொட வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அந்த நீல நிற உயிரினங்கள் அதன் முட்களைக் கொண்டு காயம் விளைவிக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

புயல் மற்று பலத்த காற்று காரணமாக இந்த உயிரினங்கள் கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

நீல நிற உயிரினங்கள் முக்கோண வடிவத்தில் ஒன்றோடு ஒன்றாக இணைந்து கடல் நீரில் நீந்தி வருகின்றன.

பார்க்க புதுவித உயிரினமாக இருப்பதால் அவற்றைக்காண பொதுமக்களும் கடற்கரைகளுக்குப் படை எடுத்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்