கியவ்: உக்ரேனின் டினிப்ரோ நகர் மீது ரஷ்யா ஏவுகணைகள் பாய்ச்சியதில் மூவர் மாண்டதாக அந்நகரின் மேயர் செர்ஹி லைசேக் தெரிவித்தார்.
தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்தனர்.
இத்தாக்குதல் உக்ரேனிய நேரப்படி அக்டோபர் 25ஆம் தேதி மாலை நிகழ்ந்தது.
தாக்குதலில் சில வீடுகளும் மருத்துவ சேவை தொடர்பான கட்டடமும் சேதமடைந்தன.
காயமடைந்தோரில் எட்டு வயது சிறுமியும் பதின்மவயது இளைஞனும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.
நகரின் பல்வேறு இடங்களைக் குறிவைத்து ரஷ்யா ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.
இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் இடிப்பாடுகளுக்கு அடியில் ஒருவர் சிக்கியிருக்கக்கூடும் என்றும் திரு லைசேக் தெரிவித்தார்.