உல்லாசக் கப்பலில் மூவர் மரணம்: நச்சுக்கிருமி காரணம் எனச் சந்தேகம்

உல்லாசக் கப்பலில் மூவர் மரணம்: நச்சுக்கிருமி காரணம் எனச் சந்தேகம்

படம்: ஏஎஃப்பி

04 May 2026 - 9:43 am

1 mins read

ஜோகனஸ்பர்க்: அட்லான்டிக் பெருங்கடற்பகுதியில் சென்ற உல்லாசக் கப்பலில் மூவர் மாண்டதாக உலகச் சுகாதார நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (மே 3) கூறியிருக்கிறது. அவர்களில் ஒருவருக்கு ‘ஹன்டா’ நச்சுக்கிருமி தொற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அந்த நச்சுக்கிருமி, எலிகளின் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது.

அர்ஜென்டினாவிலிருந்து ‘கேப் வெர்டு’க்குச் சென்றுகொண்டிருந்த ‘எம்வி ஹோண்டியஸ்’ எனும் உல்லாசக் கப்பலில் நச்சுக்கிருமி தொற்றியதாகக் கூறப்பட்டது.

“தற்போதைய நிலவரப்படி, ஒருவருக்கு ‘ஹன்டா’ நச்சுக்கிருமி தொற்றியது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஐவருக்கு அந்தக் கிருமி தொற்றியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது,” என உலகச் சுகாதார நிறுவனம், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.

“பாதிக்கப்பட்ட ஆறு பேரில் மூவர் மாண்டுவிட்டனர். ஒருவருக்குத் தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்று அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்