காஸா நகர்: கத்தோலிக்க தேவாலயத்தில் இஸ்ரேலிய கனரக வாகனம் ஒன்றால் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்திற்காக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வருத்தம் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர், குறிவைக்கப்படாத கணையால் தேவாலயம் தாக்கப்பட்டதாக திரு நெட்டன்யாகு குறிப்பிட்டார்.
காஸா நகரத்திலுள்ள புனிதக் குடும்ப தேவாலயத்தில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் மேலும் 10 பேர் காயமடைந்ததாக ஜெருசல தேவாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு கனரக வாகனக் குண்டு தேவாலயத்தின்மீது பாய்ந்ததாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், அந்தத் தேவாலயம் தவறுதலாகத் தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
இஸ்ரேலியப் படையினருக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான பூசலின்போது அமரர் போப் பிரான்சிசுடன் தொடர்பில் இருந்து வந்த தேவாலயத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதைக் கண்டு மிகவும் வருத்தம் அடைந்ததாகத் தற்போதுள்ள கத்தோலிக்க திருத்தந்தையான போப் லியோ தெரிவித்தார்.
இதற்கிடையே, தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதன் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் நெட்டன்யாகு உறுதியளித்து உள்ளார்.
தாக்குதல் குறித்து திரு டிரம்ப், தமது அதிருப்தியைத் திரு நெட்டன்யாகுவிடம் வெளிப்படுத்தியதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கெரலின் லியவிட் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“தேவாலயத்தைத் தாக்கியது இஸ்ரேலியர்களின் தவறாகும். இதைத்தான் இஸ்ரேலியப் பிரதமர், அதிபரிடம் தெரிவித்தார்,” என திருவாட்டி கெரலின் லியவிட் ஊடகங்களிடம் கூறினார்.