தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டுவிட்டருக்குப் போட்டியாக டிக்டாக்

1 mins read
39d63245-4d77-48d0-b5e0-a3a3462e27f7
டுவிட்டர் நிறுவனத்திற்குப் போட்டியாக இந்தப் புதிய அம்சத்தை வழங்க டிக்டாக் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

சான் பிரான்சிஸ்கோ: சமூக ஊடகமான ‘டிக்டாக்’ புகைப்படங்கள், காணொளி இல்லாமல் எழுத்துகள் மூலம் மட்டும் கருத்தைப் பதிவுச் செய்யும் ஒரு புதிய அம்சத்தை வழங்கப்போவதாக திங்கட்கிழமை அறிவித்தது.

டுவிட்டர் நிறுவனத்திற்குப் போட்டியாக இந்தப் புதிய அம்சத்தை வழங்க டிக்டாக்’ நிறுவனம் முடிவுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘டிக்டாக்’ வழங்கும் எழுத்துக்கள் மூலம் மட்டும் கருத்தைப் பதிவுச் செய்யும் புதிய அம்சமானது ‘இன்ஸ்டகிராமில்’ இருக்கும் அம்சத்தைப் போன்று உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

டுவிட்டர் நிறுவனத்திற்குப் போட்டியாக ‘திரட்ஸ்’ செயலியை ஜூலை மாதம் மெட்டா நிறுவனம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்டா நிறுவனத்தின் ‘திரட்ஸ்’ செயலிப் போன்று ‘டிக்டாக்’ நிறுவனமும் தன்னுடைய கிட்டத்தட்ட 1.4 பில்லியன் மாதாந்திரப் பயனாளர்கள் மூலம் பயனடைகிறது என ‘பிசினஸ் ஆப் ஆப்ஸ்’ எனப்படும் இணையத்தளம் தெரிவித்தது.

மெட்டாவின் ‘திரட்ஸ்’ செயலிப் போன்று ஒரு தனித் தயாரிப்பைத் தொடங்குவதற்கு பதிலாகத் தன் புதிய அம்சத்தைப் பயன்பாட்டில் ஒருங்கிணைக்க ‘டிக்டாக்’ திட்டமிட்டுள்ளது.

டுவிட்டர் தன் விளம்பர வருவாயில் பாதியை இழந்துவிட்டது. இது போட்டி நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது எனக் கடந்த வாரம் திரு மஸ்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்