மின்னசோட்டா: வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
குடியரசுக் கட்சி சார்பாக டோனல்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
அவரது துணை அதிபர் வேட்பாளராக ஜே.டி. வேன்ஸ் களமிறங்குகிறார்.
மறுமுனையில், ஜனநாயகக் கட்சி சார்பாக கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்குக் குறிவைத்துள்ளார்.
அவரது துணை அதிபர் வேட்பாளராக மின்னசோட்டா மாநில ஆளுநர் திரு டிம் வால்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மற்ற மூவரைவிட திரு வால்சின் சொத்து மதிப்பு குறைவானது என்று கூறப்படுகிறது.
டிரம்ப்பின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 5.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது.
ஜே.டி. வேன்சின் சொத்து மதிப்பு 4.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் 10.7 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் இடைப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கமலா ஹாரிஸ் தமது வங்கிக் கணக்குகளில் வைத்திருக்கும் ரொக்கத் தொகை 550,000 அமெரிக்க டாலருக்கும் 1.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் இடைப்பட்டது.
அவரது ஒய்வுக்கால நிதியில் 775,000 அமெரிக்க டாலருக்கும் 1.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் இடைப்பட்ட தொகை இருப்பதாகக் கூறப்படுகிறது.
டிம் வால்சின் மொத்த சொத்து மதிப்பு 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$1.33 மில்லியன்) குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

