ஒலிபெருக்கியில் சிக்கிக்கொண்ட குழந்தையின் கை

ஒலிபெருக்கியில் சிக்கிக்கொண்ட குழந்தையின் கை

1 mins read
4f14e229-2770-41d6-bb1d-973f0b2209e4
ஒலிபெருக்கிக்குள் சிக்கிக்கொண்ட குழந்தையின் கையைச் சிறப்புக் கருவிகளின் துணைகொண்டு தீயணைப்பாளர்கள் விடுவித்தனர். படம்: தி ஸ்டார் -

கோத்தா கினபாலு: தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது சில நேரங்களில் ஆபத்தை விளைவித்துவிடலாம்.

அப்படி ஓர் ஆபத்தில் சிக்கிக்கொண்டது மலேசியாவின் கோத்தா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறு பெண் குழந்தை.

தன் வீட்டில் இருந்த ஒலிபெருக்கிக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கும் ஆர்வத்தில் அதிலிருந்த துளை வழியாக கையை உள்ளேவிட்டது அக்குழந்தை.

அதன்பின், உள்ளேவிட்ட கையை வெளியே எடுக்க முடியாமல் சிக்கிக்கொண்டதால் அக்குழந்தை அவதிப்பட நேர்ந்தது. இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (31-01-2023) பிற்பகல் நிகழ்ந்தது.

இதனையடுத்து, அக்குழந்தையின் தாயார் சாபா தீயணைப்பு, மீட்புத் துறையைத் தொடர்புகொண்டு உதவிகோரினார். விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி, ஒலிபெருக்கித் துளையினுள் சிக்கிக்கொண்ட அக்குழந்தையின் கையை விடுவித்ததாக 'தி ஸ்டார்' செய்தி தெரிவித்தது.

இச்சம்பவத்தில் அக்குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.