ஜி-7 நாடுகள் அறிக்கை: ஒரே சீனா என்ற வாசகம் தவிர்ப்பு

2 mins read
e0e1c25b-8ca5-400c-8005-34b748be82a5
மார்ச் 13ஆம் தேதி கனடாவில் கூடிய ஜி-7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம். - படம்: ராய்ட்டர்ஸ்

கனடா: கனடாவில் கூடிய ஜி-7 நாடுகள் சீனாவுக்கு எதிராக கடுமையான வாசகம் அடங்கிய அறிக்கையை வெள்ளிக்கிழமை (மார்ச் 14ஆம் தேதி) வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கை, நெடுநாட்களாக தான் கடைப்பிடித்து வந்த ஒரே சீனா கொள்கையை கைவிட்டதுடன் முன்னர் வெளியிட்டிருந்த இணக்கமான வாசகங்களையும் தவிர்த்துள்ளது.

கனடாவில் கூடிய கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் பிப்ரவரி மாதம் அமெரிக்க-ஜப்பான் கூட்டறிக்கை பயன்படுத்திய வாசகங்களை ஒத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த அறிக்கை தைவானக்கு எதிராக கொடுக்கப்படும் நெருக்குதலை சுட்டியது. கனடாவில் கூடிய ஜி-7 வெளியுறவு அமைச்சர்களின் இந்த அறிக்கை தைவானுக்கு மனத்திருப்தியை அளித்திருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் இதே ஜி-7 நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் கூட்டறிக்கையுடன் ஒப்பிடும்போது தற்போதைய அறிக்கை சீனாவின் அணுசக்தி திறன் அதிகரிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளது. எனினும், தற்பேதைய அறிக்கை சீனாவின் திபெத், ஸின்ஜியாங், ஹாங்காங் போன்ற பகுதிகளில் நடப்பதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து எதுவும் கூறவில்லை.

மேலும், தற்போதைய அறிக்கையில் சீனாவுடன் ஆக்ககரமான, நிலையான உறவுகளை வலியுறுத்தும் வாசகம் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன், கவலைகளைப் பகிர்ந்து, கருத்துவேறுபாடுகளை சமாளிப்பதற்கு நேரடி, வெளிப்படையான பேச்சுவார்த்தை தேவை என்ற வாசகமும் தற்போதைய அறிக்கையில் இல்லாதது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவற்றுடன், தைவான் தொடர்பாக, ஒரே சீனா என்ற ஜி-7 நாடுகளின் அடிப்படை நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்றோ, சீனாவுடனான உறவுகளைத் தவிர்க்காது என்றோ, அனைத்துலக வர்த்தகத்தில் சீனாவின் முக்கியத்துவத்துக்கு அங்கீகாரம் அளிப்பது தொடரும் என்ற முந்தைய ஜி-7 அமைப்பின் அறிக்கைகளிலிருந்தது தவிர்க்கப்பட்டு தற்போதைய அறிக்கை மாறுபட்டிருப்பது குறிப்பிட்டுக்காட்டப்படுகிறது.

இவை யாவும் சீனாவுக்கு கவலையை அளிக்கக்கூடியவை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்