குளிர்ச்சியான பகுதிகளுக்குச் சுற்றுலா: பன்மடங்கு அதிகரிப்பு

குளிர்ச்சியான பகுதிகளுக்குச் சுற்றுலா: பன்மடங்கு அதிகரிப்பு

1 mins read
8634ed0c-6b25-4544-b112-99759fceec0f
வெப்பத்திலிருந்து தப்பிக்கக் குளிர்ச்சியான பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

அனைத்துலக அளவில் வெப்பம் உயர்ந்துவரும் நிலையில் குளிர் பகுதிகளுக்குச் சுற்றுலா மேற்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது.

சூரியக் கதிரின் வெப்பத்தை அனுபவிக்கக் கடற்கரைகளுக்குச் செல்வதற்குப் பதிலாகக் குளிர்ச்சியான, வெளிப்புற நடவடிக்கைகளுக்கு அனுகூலமான வானிலை உள்ள இடங்களை மக்கள் அதிகம் விரும்பத் தொடங்கியுள்ளனர்.

கடந்த 50க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பம் முன்பைவிட இப்போது வேகமாக அதிகரித்துவருகிறது.

காபர்னிக்கஸ் பருவநிலை மாற்றச் சேவை என்ற அமைப்பு வெளியிட்ட தகவலின்படி இவ்வாண்டின் பிப்ரவரி மாதம் ஆக வெப்பமான மாதமாகப் பதிவானது.

தொடர்ந்து ஐந்தாவது முறையாக பிப்ரவரி மாதம் ஆக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளதை அமைப்பு சுட்டியது.

இதற்கிடையே, டிரிப்.காம் (Trip.com) தளம், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்புநோக்க குளிர்ச்சியான சுற்றுலாத் தளங்களுக்கான தேடல் 74 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டது.

கோடைக்கால விடுமுறையின்போது அந்தப் போக்கு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதத்துக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் குளிர்ச்சியான இடங்களுக்கான இணையத் தேடல் 2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க 237 விழுக்காடு கூடியது.

குறிப்புச் சொற்கள்