‘டெத் வேலி’ தேசிய பூங்காவில் மாண்ட சுற்றுப்பயணி

‘டெத் வேலி’ தேசிய பூங்காவில் மாண்ட சுற்றுப்பயணி

1 mins read
e79599c9-560d-41af-845b-ad8158097982
உடலின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை எட்டியதும், வெப்ப வாதம் ஏற்படும் என்று பூங்கா அதிகாரிகள் எச்சரித்தனர். - படம்: ஏஎஃப்பி

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்க மாநிலங்களான கலிஃபோர்னியாவுக்கும் நெவாடாவுக்கும் இடையில் உள்ள ‘டெத் வேலி’ தேசிய பூங்காவில் கடும் வெப்பத்தினால் சுற்றுப்பயணி ஒருவர் உயிரிழந்தார்.

அந்த 71 வயது ஆடவர் ‘கோல்டன் கேனியன்’ பகுதியில் உள்ள கழிவறை ஒன்றுக்கு வெளியே மயங்கி விழுந்ததாகப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு வெப்பநிலை 49 டிகிரி செல்சியசைத் தொட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கோடைக்காலத்தில் ‘டெத் வேலி’யில் ஏற்பட்டுள்ள இரண்டாவது மரணம் இது.

இவ்வாண்டில் 28 நாள்களில் ‘டெத் வேலி’யில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியசைத் தாண்டியிருப்பதாக அமெரிக்க தேசிய வானிலை நிலையம் தெரிவித்தது.

ஒருவர் உடலின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தொட்டால், வெப்ப வாதம் ஏற்படலாம் என்று பூங்கா அதிகாரிகள் எச்சரித்தனர்.

பூங்காவின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் மிகக் கடுமையான கோடைக்கால வெப்பநிலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 43 டிகிரி செல்சியசுக்கும் 49 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிகமான தண்ணீரைக் கொண்டுசெல்லவும் அருந்தவும் சுற்றுப்பயணிகளிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்