பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் அண்மையில் ஏற்பட்ட துயரச் சம்பவம் பலரைச் சோகத்தில் ஆழ்த்தியது.
பேராக் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலையில் யானைக் கன்று மீது லாரி ஒன்று மோதியது.
அதில் அந்த யானைக் கன்று மடிந்தது.
கன்று மடிந்துவிட்டது என்று தெரியாமல் அதைக் காப்பாற்ற தாய் யானை சிரமப்பட்ட காட்சிகள் காணொளியில் பதிவாகின.
கன்றின் உடலை விட்டுச் செல்லாமல் தாய் யானை அங்கேயே இருந்தது.
இணையத்தில் வலம் வந்த இக்காட்சிகள் பார்ப்போர் மனதை உருக்கின.
சமூக வலைத்தளங்களில் இக்காணொளியைக் கண்ட சிலர் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சர் நிக் நாஸ்மி நிக் அகமது, பொதுப் பணி அமைச்சர் அலெக்சாண்டர் நன்டா லிங்கி ஆகியோரை ‘டேக்’ செய்தனர்.
இம்மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்கவும் வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பலர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
லாரி ஓட்டுநருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் குரல் எழுப்பினர்.
யானைக் கன்று திடீரென்று சாலையின் குறுக்கே ஓடியதாக லாரி ஓட்டுநர் தெரிவித்தார்.