விமான படிக்கட்டிலிருந்து விழுந்து பயணி மரணம்

விமான படிக்கட்டிலிருந்து விழுந்து பயணி மரணம்

1 mins read
3ef68fcd-63fc-4d6c-8f0e-297b8b846f8d
மேற்கு இலங்கையில் நீர்கொழும்புக்கு அடுத்த புறநகர்ப் பகுதியான கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. படம்: newswire.lk -

இலங்கை வழியாக கனடாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த இந்தியப் பயணி ஒருவர், விமானத்திலிருந்து இறங்கியபோது அதன் படிக்கட்டிலிருந்து விழுந்து உயிரிழந்துவிட்டார்.

மேற்கு இலங்கையில் நீர்கொழும்புக்கு அடுத்த புறநகர்ப் பகுதியான கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 1) பிற்பகல் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இறந்தவரின் பெயர் கே.ஜார்ஜ் என்று டெய்லி நியூஸ் செய்தித்தளம் குறிப்பிட்டது. அவருக்கு வயது 65.

நீர்கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு அவர் இறந்துவிட்டதாக விமான நிலைய காவல்துறை தெரிவித்ததாக டெய்லி நியூஸ் அதன் செய்தியில் குறிப்பிட்டது.