ஹாங்காங்: ‘டொராஜி’ புயல் ஹாங்காங்கை நோக்கி விரைகின்ற நிலையில் அங்குள்ள பள்ளி[Ϟ]களும் பல கடைகளும் நவம்பர் 14ஆம் தேதி காலை மூடப்பட்டன.
இருப்பினும், ‘டொராஜி’ புயல் ஹாங்காங்கை அடைவதற்கு முன்பு வலுவிழந்து வேறு திசை நோக்கிப் போய்விடும் என்று ஹாங்காங் வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.
இந்நிலையில், ஹாங்காங்கில் பலத்த காற்று வீசியதாகவும் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
நகர மையத்தில் மிகவும் குறைந்த அளவிலான சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஹாங்காங் பங்குச் சந்தை நவம்பர் 14ஆம் தேதி காலை திறந்திருந்ததாகவும் வழக்கம் போல செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புயல் நேரத்தில் ஹாங்காங் பங்குச் சந்தை வழக்கம் போல செயல்பட்டது இதுவே முதல்முறை.
ஹாங்காங் விமான நிலையமும் வழக்கம் போல செயல்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.