41 நாடுகளுக்குப் பயணத் தடை விதிக்க டிரம்ப் நிர்வாகம் திட்டம்

1 mins read
8180a970-e934-4236-a507-b65fcf32a4ac
அமெரிக்கா அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்கா அதிபர் டோனல்ட் டிரம்ப் 41 நாடுகளின் குடிமக்கள்மீது பயணத் தடை விதிக்கத் திட்டமிடுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

பயணத் தடை குறித்து விவரங்கள் தெரிந்த நபர் அந்தத் தகவலைக் கொடுத்ததாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

தற்போது தயாரிக்கப்பட்ட உத்தேசப் பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் அவர்தான் இறுதிப் பட்டியலை முடிவு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மூன்று பிரிவுகளாக நாடுகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

முழுமையாக விசா நிறுத்தம் பட்டியலில் ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வடகொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனின்சுலா, ஏமன் ஆகிய நாடுகள் உள்ளன.

பாதி விசா நிறுத்தம் பட்டியலில் லாவோஸ், மியன்மார் உள்ளிட்ட சில நாடுகள் உள்ளன. இதனால் அந்நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குச் சுற்றுலா, கல்வி மற்றும் சில விசாக்களைப் பெறமுடியாது.

அமெரிக்காவுடனான குறைபாடுகளைத் தீர்க்காவிட்டால் பாதி விசா நிறுத்தம் பட்டியலில் மேலும் சில நாடுகள் சேர்க்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதில் பூட்டான், கம்போடியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்