சில மின் நிலையங்களுக்கான கரிமத் தரநிலைகளைத் திரும்பப் பெறுகிறது டிரம்ப் நிர்வாகம்

சில மின் நிலையங்களுக்கான கரிமத் தரநிலைகளைத் திரும்பப் பெறுகிறது டிரம்ப் நிர்வாகம்

2 mins read
dde35671-8865-41f9-a578-42451c084f3b
அமெரிக்காவில் பசுமை இல்ல வாயுக்கள் அதிக அளவில் வெளியேறுவதற்கு மின் நிலையங்களே மிகப்பெரிய தொழிற்துறை ஆதாரமாக உள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, புதைபடிவ எரிபொருளால் இயங்கும் மின் நிலையங்களுக்கான கார்பன் மாசு தரநிலைகளை திங்கட்கிழமை (செப்டம்பர் 14) முறைப்படி திரும்பப் பெறக்கூடும் என்று அது பற்றி அறிந்தவர்கள் கூறினர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முக்கிய நடவடிக்கை, டெக்சஸின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ஜி-20 (G20) எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்திற்கு இடையே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பெயர் வெளியிட விரும்பாத அந்த நபர்கள் தெரிவித்தனர்.

வாகனங்களுக்கான இதுபோன்ற பருவநிலை தரநிலைகளை இவ்வாண்டு ஏற்கெனவே அந்த முகமை திரும்பப் பெற்றது.

டிரம்ப் ஆட்சியின் கீழ், கடந்த கோடைக் காலத்தில் மின் நிலைய பருவநிலை விதிகளைத் திரும்பப் பெற சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை இதற்கு முன்னர் யோசனை தெரிவித்திருந்தது.

முந்தைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் எதிர்கால அமெரிக்கப் புதைபடிவ எரிபொருள் மின் நிலையங்கள் குறிப்பிட்ட கரி வெளியேற்றக் குறைப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்ட கட்டாயத்தை ரத்து செய்வதற்கான ஆரம்பக்கட்ட யோசனையின் ஒரு பகுதியை முகமை இறுதிசெய்து வருகிறது.

அந்தக் கட்டாயத்தின்கீழ் இருந்த கரிம வெளியேற்றக் குறைப்பு தொழில்நுட்பங்களில் ‘கரிமப் பிடிப்பு மற்றும் சேமிப்பு’ என்பதும் அடங்கும். மேலும் இது வரும் ஆண்டுகளில் மின் நிலையங்களின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைப் பெருமளவில் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

மின் நிலையங்களிலிருந்து வெளிவரும் பசுமை இல்ல வாயுக்கள் குறிப்பாக அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்ற கண்டுபிடிப்பை ரத்து செய்ய தனி விதியை முன்மொழியவும் முகமை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் பசுமை இல்ல வாயுக்கள் அதிக அளவில் வெளியேறுவதற்கு மின் நிலையங்களே மிகப்பெரிய தொழிற்துறை ஆதாரமாக உள்ளன.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஎரிவாயுகரிமம்