பியோங்யாங்குடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் நிச்சயமாக விரும்புகிறார்: தென்கொரிய அதிபர்

பியோங்யாங்குடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் நிச்சயமாக விரும்புகிறார்: தென்கொரிய அதிபர்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

18 Sep 2026 - 5:51 pm

1 mins read

சோல்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிவதாகத் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) கூறினார்.

அதேவேளை, ஈரான் போரில் ராணுவரீதியாகத் தலையிட சோல் படைகளைப் பணியில் ஈடுபடுத்தாது என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாண்டு பிற்பகுதியில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைத் தாம் சந்திக்க விரும்புவதாக திரு டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார்.

தமது முதல் தவணைக்காலத்தில் திரு கிம்முடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொண்டதாக திரு டிரம்ப் கூறுகிறார். அந்த உறவுக்குப் புத்துயிர் அளிக்க அவர் முயற்சி எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு கிம்முடன் ஒத்துப்போவது முக்கியம் என்று திரு டிரம்ப் கூறியிருந்தார். பியோங்யாங்கிடம் மிகவும் சக்திவாய்ந்த 57 அணுவாயுதங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த எண்ணிக்கை 80லிருந்து 120 வரை இருக்கும் என்று சோல் கூறிவருகிறது.

அண்மை ஆண்டுகளில் ர‌ஷ்யாவிடமிருந்து குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றுள்ள வடகொரியா, திரு டிரம்ப் கூறியதற்குப் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. திரு டிரம்ப் பேச்சுவார்த்தையை விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிவதாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு தாமும் அவரை ஊக்குவிப்பதாகவும் திரு லீ வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்வடகொரியாஅமெரிக்காடோனல்ட் டிரம்ப்தென்கொரியாசந்திப்புபேச்சுவார்த்தைகிம் ஜோங் உன்