போப் ஆடையில் டிரம்ப்; படம் பதிவேற்றம்

1 mins read
f6427d5e-ec40-4bad-a9eb-fa648eea9f63
திரு டிரம்ப்பின் ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் இப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டது. - படம்: DONALDJTRUMP / ட்ரூத் சோ‌ஷியல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தாம் ரோமன் கத்தோலிக்க திருச்சபைத் தலைவரின் ஆடையில் இருப்பதுபோன்ற கிண்டலான படத்தை வெள்ளிக்கிழமை (மே 2) தமக்குச் சொந்தமான ட்ரூத் சோ‌ஷியல் சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றம் செய்தார்.

இப்படம், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதுபோல் தெரிகிறது.

போப் ஃபிரான்சிஸ் மாண்டதையடுத்து தாம் அப்பொறுப்பை வகிக்கப்போவதாக திரு டிரம்ப் விளையாட்டாகக் கூறியிருந்தார். அதனையடுத்து அவர் இப்படத்தைப் பதிவேற்றம் செய்தார்.

போப் ஃபிரான்சிஸ், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி மாண்டார். அடுத்த போப்பைத் தேர்ந்தெடுக்க கார்டினல்கள் ஒன்றுகூடவிருக்கும் நிலையில் திரு டிரம்ப், தாம் அடுத்த போப்பாகப் பொறுப்பு வகிக்க விரும்புவதாக இவ்வாரம் செய்தியாளர்களிடம் கேலியாகச் சொன்னார்.

யார் அடுத்த போப்பாக இருக்க வேண்டும் என்று தமது விருப்பம் கேட்கப்பட்டபோது திரு டிரம்ப் அவ்வாறு விளையாட்டாகக் கூறினார். பிறகு அவர், நியூயார்க் நகரில் உள்ள கார்டினல் ஒருவர் அப்பொறுப்பை ஏற்கச் சிறந்தவர் என்று தாம் எண்ணுவதாகக் குறிப்பிட்டார்.

திரு டிரம்ப், நியூயார்க் ஆர்ச்பி‌ஷப் திமத்தி டோலனைக் குறிப்பிட்டுப் பேசியதாகக் கருதப்படுகிறது. ஆர்ச்பி‌ஷப் திமத்தி டோலன், பழைமைவாதச் சிந்தனை கொண்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்