டிரம்ப்: புட்டினைக் கூடிய விரைவில் சந்திப்பேன்

டிரம்ப்: புட்டினைக் கூடிய விரைவில் சந்திப்பேன்

1 mins read
66a2bad9-e7b0-4759-b6fc-d1a8e1195757
ஜனவரி 20ல் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப். - படம்: நியூயார்க் டைம்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபராக டோனல்ட் டிரம்ப் ஜனவரி 20ல் பதவி ஏற்க இருக்கிறார். பதவி ஏற்றதும், கூடிய விரைவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்திக்க இருப்பதாக திங்கட்கிழமை (ஜனவரி 13) டிரம்ப் தெரிவித்தார். ரஷ்யா-உக்ரேன் போரை நிறுத்த டிரம்ப் கையாள இருக்கும் உத்தி பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டு வருவது புட்டினின் கைகளில் உள்ளது என்றார்.

ஆனால் புட்டின் நினைத்ததுபோல போரின் விளைவுகள் இல்லை என்பதால் அதை அவர் தற்போது நிறுத்த விரும்பமாட்டார் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

“என்னைச் சந்திக்க புட்டின் விரும்புகிறார் என்று எனக்குத் தெரியும். அவரைக் கூடிய விரைவில் சந்திப்பேன். அவரை முன்பே சந்தித்திருப்பேன். ஆனால் அதிபர் பதவி ஏற்ற பிறகே சந்திப்பு நிகழ வேண்டும்,” என்றார் டிரம்ப்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்