ஈரானின் எரிசக்தி வளங்களைத் தாக்க வேண்டாம் என இஸ்ரேலிடம் டிரம்ப் வலியுறுத்து

ஈரானின் எரிசக்தி வளங்களைத் தாக்க வேண்டாம் என இஸ்ரேலிடம் டிரம்ப் வலியுறுத்து

1 mins read
ff357d30-6ff5-4a56-bdc1-560730f3ffb7
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: இபிஏ

வா‌‌ஷிங்டன்: ஈரானின் இயற்கை எரிவாயுக் கட்டமைப்புகளை மீண்டும் மீண்டும் தாக்க வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வியாழக்கிழமை (மார்ச் 19) இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்வள நகரை ஈரான் தாக்கியது. அதனைத் தொடர்ந்து எரிசக்தி விலைகள் வெகுவாக அதிகரித்தன. இந்நிலையில் திரு டிரம்ப்பின் கோரிக்கை வந்துள்ளது.

உலகின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு அங்குச் சுத்திகரிக்கப்படுகிறது. கத்தாருக்கு ஏற்பட்ட சேதத்தைச் சரிசெய்யப் பல்லாண்டாகும் என்று கூறப்படுகிறது.

ஈரான்மீது சென்ற மாதம் (பிப்ரவரி) 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்தன. ஈரானும் வளைகுடா வட்டாரத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்களையும் இஸ்ரேலையும் தாக்கி வருகிறது.

செங்கடலில் அமைந்துள்ள சவூதி அரேபியாவின் முக்கியத் துறைமுகமும் தாக்குதலுக்கு இலக்கானது. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ள வேளையில், சவூதி அரேபியா அங்கிருந்துதான் சில ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது.

குறிப்புச் சொற்கள்