தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிருமி தொடர்பான ஆராய்ச்சியைக் கட்டுப்படுத்திய டிரம்ப்

1 mins read
43c7e205-22c7-4e4d-a0c8-d3f1aea83f0e
ஆராய்ச்சிக்கு எதிராகக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: கிருமிகள் தொடர்பான ஓர் உயிரியல் ஆராய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதிய கட்டுப்பாட்டு உத்தரவு விதித்துள்ளார். அந்த ஆய்வின் மூலம் சீனாவிலிருந்து கொவிட்-19 கிருமிப் பரவல் தொடங்கியதாக அமெரிக்க அரசாங்கம் கூறுகிறது.

இந்த ஆராய்ச்சிக்கு எதிரான கட்டுப்பாட்டு உத்தரவு திங்கட்கிழமை (மே 5) விதிக்கப்பட்டது.

இந்த ஆராய்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கிருமிக் கசிவுகளிலிருந்து முழுமையான பாதுகாப்பு கொண்ட ஆராய்ச்சிக்கூடங்களே கிடையாது என்று அமெரிக்க சுகாதார அமைச்சர் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இந்தப் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் எதிர்காலத்தில் கிருமிப் பரவல்களைத் தடுக்கலாம் என்றும் பல உயிர்களைக் காப்பாற்றலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் நாடுகள் அவற்றின் மக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாக அமெரிக்காவின் தேசிய சுகாதாரக் கழகங்களின் இயக்குநர் திரு ஜெய் பட்டாச்சார்யா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்