புதுடெல்லி: இந்தியாவும் ரஷ்யாவும் தரப்புக்கு $50 மில்லியன் என 2030ஆம் ஆண்டுக்குள் $100 மில்லியன் மதிப்புள்ள இருநாட்டு வர்த்தகத்தை எட்ட செயலாற்றுவதாக இந்திய வர்த்தகத் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) தெரிவித்தார்.
புதிய இருநாட்டு முதலீட்டு ஒப்பந்தம் (பிஐடி) குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளவும் ரஷ்ய தொழில்துறை வர்த்தக அமைச்சர் அன்டொன் அலிகனோவ் அந்நாட்டு அதிபர் புட்டினின் குழுவுடன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
புதுடெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் வியாழக்கிழமை தொடங்கிய அனைத்துலகத் தொழில் கண்காட்சியில், இந்தியா - ரஷ்யா வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்நிகழ்வில் ரஷ்ய அமைச்சர் முன்னிலையில் உரையாற்றிய திரு பியுஷ் அவரது கருத்தை முன்வைத்தார்.
இருநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அவர்களது முதலீடுகளுக்கு பிஐடி ஒப்பந்தம் சட்டப்படி உத்தரவாதம் அளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் ரஷ்யாவின் தலைமையில் இந்திய-யுரேஷிய பொருளியல் ஒன்றியம் என்ற அமைப்பை (இஏஇயு) உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிப்பதற்கு இரு நாடுகளும் கடப்பாடு கொண்டுள்ளதையும் அவர் விளக்கினார்.
அந்த அமைப்பில் செய்யப்படவுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஆர்மேனியா, பெலாரூஸ், கஸக்ஸ்தான், கிர்கிஸ்தான் உட்பட்டவை உறுப்பு நாடுகளாக அமையவுள்ளன.
ரஷ்யாவின் யுஏசி நிறுவனத்திடமிருந்து 105 ஐஎல்-114-300 ரகப் பயணிகள் விமானங்களை வாங்க மூன்று இந்திய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. பினாக்கிள் ஏர், ஸ்லீக், ஏர் கேரளா ஆகிய நிறுவனங்களுக்கு இவை விநியோகிக்கப்படவுள்ளன. 68 இருக்கைகள் கொண்ட அந்த விமானங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாகவுள்ளது.
இரு அமைச்சர்களும் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் பல முக்கிய அம்சங்களை ஆராய்ந்தனர்.
ரஷ்யாவுக்கான ஏற்றுமதியில் இந்தியா பின்தங்கியுள்ளதை இந்தியா முன்வைத்தது. இந்திய ஏற்றுமதிகளை அதிகரித்து அதனை எப்படி சமமாக்குவது என்பதும் வேளாண் உற்பத்தி, மருந்துப்பொருள்கள், ஆடைகள், துணி வர்த்தகம் போன்றவற்றை அதிகமாக ஏற்றுமதி செய்வது போன்றவையும் விவாதிக்கப்பட்டன.
இந்திய அரசாங்கத் தரவகளின்படி இருதரப்பு வர்த்தகம் சாதனை அளவாக 2024-2025 ஆம் ஆண்டில் $68.7 பில்லியன் இருந்து பிறகு 2025-2026ல் $60 பில்லியனாகக் குறைந்துள்ளது.
ரஷ்யாவுக்கான இந்திய ஏற்றுமதி $5 பில்லியன் மட்டுமே. ஆனால் இந்தியாவில் ரஷ்யா $55 பில்லியனுக்குமேல் இறக்குமதி செய்துள்ளது. எரிபொருளே ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிகமாக இறக்குமதி செய்யும் முக்கியப் பொருளாக விளங்குகிறது.

