இல்லத்தரசிகளின் நண்பனுக்கு ஆபத்து; சிக்கலில் டப்பர்வேர்

இல்லத்தரசிகளின் நண்பனுக்கு ஆபத்து; சிக்கலில் டப்பர்வேர்

1 mins read
72c57d82-02ad-468b-8c94-dd6c726a99d6
படம்: ராய்ட்டர்ஸ் -

வீட்டு சமையல் அறைகளில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்த பொருள்களில் டப்பர்வேர் நிறுவனத்தின் பொருள்களும் ஒன்று.

தற்போது அந்த நிறுவனம் பெரும் சிக்கலில் உள்ளது. அவற்றின் பங்குகள் திங்கள்கிழமை கிட்டத்தட்ட 50 விழுக்காடு சரிந்தது.

நொடித்துப்து போகும் நிலையில் உள்ள அந்நிறுவனத்தின் நிதி நிலைமையைப்பற்றி கடந்த வாரம் கூட பேசப்பட்டது.

கொவிட் காலக்கட்டத்தில் டப்பர் வேரின் விற்பனைகள் அதிகமானது. அதனால் அதன் பங்கு விலைகளும் உயர்ந்தன. ஒரு பங்கின் விலை 37 அமெரிக்க டாலர் வரை உயர்ந்தது.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஒரு பங்கின் விலை 1.22 டாலருக்கு வந்துள்ளது.

உணவு அடைக்க உதவும் பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கும் டப்பர்வேர் நிறுவனம் 1946ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, அது 70 மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

நிறுவனம் 700 மில்லியன் டாலர் கடன் சுமையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.