தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவமனைமீது ஹெலிகாப்டர் மோதி நால்வர் உயிரிழப்பு

1 mins read
20bfbe35-d1d9-44c6-be69-02f10952196d
மருத்துவமனைக் கட்டடத்தின் நான்காவது மாடி மீது அந்த ஹெலிகாப்டர் மோதியதாகவும் அதன் பிறகு தரையில் விழுந்து நொறுங்கியதாகவும் முக்லா வட்டாரத்தின் ஆளுநர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். - கோப்புப்படம்

அங்காரா: துருக்கியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மருத்துவமனைக் கட்டடம் மீது ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் ஒன்று மோதி தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் நால்வர் உயிரிழந்தனர்.

முக்லா பயிற்சி, ஆய்வு மருத்துவமனையிலிருந்து அந்த ஹெலிகாப்டர் இரண்டு விமானிகள், ஒரு மருத்துவர், ஒரு மருத்துவ ஊழியர் ஆகியோருடன் புறப்பட்டதாக துருக்கிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மருத்துவமனைக் கட்டடத்தின் நான்காவது மாடி மீது அந்த ஹெலிகாப்டர் மோதியதாகவும் அதன் பிறகு தரையில் விழுந்து நொறுங்கியதாகவும் முக்லா வட்டாரத்தின் ஆளுநர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மருத்துவமனையில் இருந்தோரும் மருத்துவமனைக்கு வெளியே இருந்தோரும் காயமடையவில்லை என்று அவர் கூறினார்.

சம்பவம் நிகழ்ந்தபோது அப்பகுதி பனிமூட்டமாக இருந்ததாக அறியப்படுகிறது.

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

மருத்துவமனைக்கு வெளியே ஹெலிகாப்டரின் பாகங்கள் சிதறிக் கிடப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

சம்பவ இடத்தில் பல ஆம்புலன்ஸ்களும் அவசரகால குழுக்களும் இருப்பதைக் காணொளியில் காண முடிந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்