துருக்கியை வலுவான நிலநடுக்கம் உலுக்கி 278 மணிநேரம் கடந்துள்ள நிலையில் ஆடவர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 45 வயதான அவர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டார்.
துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் பிப்ரவரி 6ஆம் தேதி தாக்கியது. இதில் பலியானோரின் எண்ணிக்கை 41,000ஆக உயர்ந்துள்ளது.
இடிபாடுகளில் இருந்து உயிரோடு இருப்பவர்களையும் சடலங்களையும் தேடும் பணி தொடர்கிறது. முன்னதாக 12 வயது சிறுவன் உள்பட மூன்று பேர் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர்.


