சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 23ஆம் தேதி) 39 பேருக்கு தொற்று பதிவானதை அடுத்து, இங்கு கொவிட்-19 கிருமித்தொற்றினால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,943 ஆகியுள்ளது.
அவர்களில் இருவர் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் தங்குவிடுதிவாசி என சுகாதர அமைச்சின அறிக்கை தெரிவித்தது.
வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்களிடையே கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 36 பேரில் 16 பேர் நிரந்தரவாசிகள், அறுவர் இல்லப் பணிப்பெண்கள்.
நேற்று உள்ளூரில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் ஒருவர் டைமென்ஷன்ஸ் இன்டர்நேஷனல் காலேஜில் பயிலும் 11 வயது மாணவர், மற்றொருவர் 32 வயதான வெளிநாட்டு ஊழியர்.
11 வயதுச் சிறுவன், மாணவர் அனுமதி அட்டையில் இருக்கும் இந்திய நாட்டவர்.
பெற்றோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டிருந்தான்.
விடுதிவாசியான அந்த வெளிநாட்டு ஊழியர் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர் என்று தெரிவிக்கப்பட்டது.

